» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே 2 இளம்பெண்கள் தற்கொலை

ஞாயிறு 5, ஜூலை 2020 11:42:40 AM (IST)

தூத்துக்குடி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே வடக்கு ஆவரைக்குளம் பகுதியினை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சுரேதா (21). கணேசன் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து அவரது மனைவி முருகம்மாளிடம் ,தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சுரேதா சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்
 
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உடையார்குளத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் வளர்மதி (23). இவர் அடிக்கடி செல்போனில் பேசியதை அவரது தந்தை வேல்முருகன் கண்டித்தாராம். இதனால் விரக்தியடைந்த வளர்மதி சம்பவத்தன்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Anbu Communications






Thoothukudi Business Directory