» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை : எஸ்பி ஜெயக்குமார் பேட்டி

ஞாயிறு 5, ஜூலை 2020 10:33:51 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளைத் தவிர பிற  பணிகளுக்கு வரை வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி கணேஷ் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி, அநாவசியமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வானங்களில் செல்வோருக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

அப்போது எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெடிக்கல், கரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் தேவையில்லாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரில் 28 இடங்களில் இதுபோல் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் அந்த அமைப்பிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில்தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்


மக்கள் கருத்து

KannanJul 5, 2020 - 07:59:27 PM | Posted IP 162.1*****

Super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory