» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வழக்கறிஞர் உட்பட 3பேருக்கு அரிவாள் வெட்டு : 13 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

ஞாயிறு 5, ஜூலை 2020 9:57:28 AM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர், அவரது மனைவி மற்றும் தாயாரை அரிவாளால் வெட்டியதோடு, வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாக 13 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கணேஷ் (35). தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி (28) தாயார் இளங்கனி (65). கணேஷ் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டிற்கு அப்பகுதியை சேர்ந்த இசக்கி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனை கணேஷ் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இசக்கி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இசக்கி உட்பட 13பேர் கும்பல் நேற்று கணேஷ் வீட்டிற்கு சென்று கணேஷ், அவரது மனைவி  மற்றும் தாயாரை அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும், வீட்டின் முன்னால் நிறுத்தி இந்த கார் கண்ணாடியும் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த கணேஷ் அவரது மனைவி, மற்றும் தாயார் ஆகிய மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கணேஷ் அளித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிந்து, இசக்கி உட்பட 13 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes







Thoothukudi Business Directory