» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரண்ட்ஸ் ஆப் போலீசில் சேவா பாரதி உறுப்பினர்கள் செயல்பட தடை: சமூக ஆர்வலர் கோரிக்கை!!

ஞாயிறு 5, ஜூலை 2020 9:28:00 AM (IST)

தமிழக காவல்நிலையங்களில் சேவா பாரதி அமைப்பின் உறுப்பினர்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் (FOP) ஆக இருந்து கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் செயலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் காவலர்களுக்கு உதவியாக செயல்படுவதை தடை செய்ய வேண்டும் என மக்கள் மேம்பாட்டு கழகம் அமைப்பாளர் வழக்கறிஞர் அதிசயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு அனுப்பியுள்ள மனு : நான் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், மக்கள் மேம்பாட்டு கழகம் என்ற அமைப்பின் அமைப்பாளராகவும் இருந்து சமூகப் பணி ஆற்றி வருகின்றேன். கடந்த 19-5-2020ல் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்து மேற்படி இருவரும் இரண்டு நாட்கள் கழித்து மரணம் அடைந்துள்ளார்கள். மேற்படி காவல்நிலைய சித்ரவதையில் காவல்நிலைய காவலர்களுக்கு உதவியாக செயல்பட்டு வரும் சேவா பாரதி அமைப்பை சேர்ந்த சமூக சேவகர்களாக செயல்பட்டு வரும் Friends of Police (FOP)-ல் உள்ளவர்கள் மேற்படி இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்து காவலர்களுக்கு உடைந்தையாக செயல்பட்டுள்ளார்கள். 

மேற்படி இருவரின் மரணத்திற்கு பின்பு தமிழகமெங்கும் FOP-ல் உள்ளவர்கள் சம்பந்தமாகவும், அவர்களது செயல்பாடுகள் சம்பந்தமாகவும் கேள்வி எழும்பியுள்ளது. மேற்படி FOP-ல் உள்ளவர்கள் சேவா பாரதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆவார்கள். மேற்படி சேவா பாரதி அமைப்பானது 1989ம் ஆண்டிலிருந்து RSS அமைப்பின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகின்றது. மேற்படி RSS அமைப்பின் நோக்கம், இந்தியாவை இந்து தேசியமாக மாற்றுவதுதான் அதன் நோக்கமாகும். மேற்படி RSS அமைப்பின் துணை அமைப்பானது மக்களுக்கு சமூக சேவை செய்வதாகக் கூறி தமிழக காவல்துறையில் FOP என்ற பெயரில் இயங்கி வருகிறது.

மேற்படி FOP-ல் உள்ளவர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 10க்கும் குறைவானவர்கள் காவல்நிலைய காவலர்களுக்கு உதவியாக ஆளுயர கம்புகளை வைத்துக் கொண்டு குற்றவாளிகளை தேடிச் சென்று தாக்குவது, போக்குவரத்தை சரிசெய்வதாகக் கூறி வரம்பு மீறுவது, காவல்நிலையத்தில் குற்றவாளிகளை அடித்து சித்ரவதை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு ஊரடங்கை மீறி வாகனத்தில் வருபவர்களை காவல்துறையினருடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் சட்டத்திற்கு மீறி லத்தியால் அடித்து, உதைத்து மேற்படி FOP-ல் உள்ளவர்கள் மனித உரிமை மீறல் செயலை செய்துள்ளார்கள்.

தமிழகமெங்கும் காவல் நிலையங்களில் காவலர்களுடன் சேர்ந்து செயல்படும் மேற்படி FOP-ல் உள்ளவர்கள் இந்துத்துவா கொள்கைகளுடன் மதவெறியுடன் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றார்கள். மேற்படி குழுP-ல் உள்ளவர்களின் செயல்பாடுகள் சாத்தான்குளத்தில் நடந்த இரண்டு மரணத்திற்கு பின்பு வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. மேற்படி FOP-ல் உள்ளவர்கள் RSS-ல் பயிற்சி பெற்றவர்களாக இருப்பதினால் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களுக்கு எதிராகவும், முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்களுக்கு எதிராகவும் காவலர்களுடன் சேர்ந்து மனித உரிமை மீறல் செயலை செய்கிறார்கள். கடந்த 2020ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கிறிஸ்தவ மத போதகர்கள் 9 நபர்கள் மத பிரச்சார துண்டறிக்கை கொடுத்ததாக இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் முன்பு அவர்களை அடித்து காயப்படுத்தியுள்ளார்கள். 

மேற்படி சேவா பாரதி அமைப்பை சேர்ந்த சமூக சேவகர்கள் என்ற போர்வையில் காவல்நிலைய காவலர்களுடன் FOP ஆக செயல்படும் மேற்படி அமைப்பினை தமிழக காவல்நிலைய காவலர்களுடன் செயல்படுவதை தடை செய்ய வேண்டியது நீதியின்பொருட்டு அவசியமாகின்றது. ஆகவே மாண்புமிகு நீதிபதி அவர்கள், தமிழக காவல்துறையில் Friends of Police என்ற பெயரில் காவல்நிலைய காவலர்களுடன் சேர்ந்து கொண்டு மனித உரிமை மீறல் செயலை செய்து வரும் மேற்படி அமைப்பினை விசாரணை செய்து, தமிழக காவல்நிலையங்களில் மேற்படி FOP அமைப்பினர் செயல்படுவதை தடை செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

Fake NewsMar 23, 1594 - 10:30:00 PM | Posted IP 173.2*****

Fake News

thavarana thagaval...Jul 5, 2020 - 06:25:44 PM | Posted IP 108.1*****

thavarana thagaval...sevabharathi ithu sambanthamaga erkanave vilakkam alithullathu... atharamatra kutra sattu kooruvathu sattapadi kutram ....

ManiJul 5, 2020 - 03:22:09 PM | Posted IP 173.2*****

Sathankulam police station la Christians thaan FOP ya irukenga....TUTYONLINE pls avoid such postings....today in all newspaper sevabharathi objection koduthirukanga....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory