» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரிவை தடை செய்யக் கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சனி 4, ஜூலை 2020 9:47:53 PM (IST)பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரிவை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலையில் கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு தாமதம் செய்யாமல் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். காவல்துறையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்னும் பிரிவை தடை செய்ய வேண்டும். மத்திய அரசு பெட்ரோல்,டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்ய வேண்டும்.கரோனா ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு உத்தரவை மீறி தனியார் நிதி நிறுவனத்தில் இஎம்ஐ உள்ளிட்ட நுண்நிதி கடன்களை வசூலிப்பார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மாதாங்கோவில் ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் ஜெய்லானி கனி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் உமாசங்கர், மாவட்ட குழு உறுப்பினர் தினேஷ்குமார், வாலிபர் சங்க நிர்வாகிகள் கருத்தப்பாண்டி, மாரிச்செல்வம், ராஜா, சிவா, ரகு, அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ArasaamuthuJul 5, 2020 - 06:35:30 AM | Posted IP 162.1*****

நல்ல நோக்கம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்போது கயவர்கள் கூடாரம் ஆகிவிட்டது. போலீஸ் ன் எடுபிடி. லஞ்சம் வசூல் செய்ய,திருட்டுப் பசங்க போலீஸ் இடையே பாலம் போல் செயல்பட்ட இவர்களை தடை பன்ன வேண்டும். பிடிபடும் illegal things இவர்கள் மூலம் விற்பனை செய்வது போலீஸ் ன் வேலை.

பாலாJul 4, 2020 - 10:44:34 PM | Posted IP 162.1*****

கண்டிப்பாக தடை செய்ய வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory