» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து வழிபாட்டு தலங்களை மட்டும் இடிக்க முயற்சிப்பது நியாயமா ? : தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்து முன்னணி கேள்வி

சனி 4, ஜூலை 2020 8:37:18 PM (IST)

இந்து வழிபாட்டுத் தலங்களை மட்டும் இடிக்க முயற்சி செய்வது நியாயமா என தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு சில கேள்விகளை எழுப்பி பதில் அளிக்குமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,

தூத்துக்குடி மாநகராட்சி டவுன் பிளான் சர்வேயின்படி தமிழக அரசு பொதுமக்கள் பொழுதுபோக்கு பூங்காவிற்கு வழங்கிய இடங்கள் எங்கே? அதனை தங்களால் அடையாளம் காட்ட முடியுமா? தூத்துக்குடி பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 44 கிணறுகள் இருந்த இடத்தில் தற்போது உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றுமா? தூத்துக்குடி பெரிய மாதா கோயில் இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேற்கு புறத்தில் சிதம்பரநகர் சாலையிலிருந்து பல ஆண்டுகளாக அமைந்திருந்த பொது பாதையை ஒரு சர்ச் நிர்வாகம் ஸ்டேடியம் அமைத்து ஆக்கிரமித்துள்ளது. தற்போது அந்த அவசர பாதை காணாமல் போயுள்ளது மாநகராட்சி நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி மருத்துவமனைக்கு அவசர பாதை ஏற்படுத்தி கொடுக்குமா?) தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசல் பகுதியில் பிணம் புதைக்ககூடாது என்று மாற்று இடமாக மாநகராட்சி நிர்வாகம் சிதம்பரநகர் பகுதியில் கொடுத்த இடத்தில் விதிமுறைகளை மீறி வணிக வளாகம் பள்ளிக்கூடம் கடைகள் கட்டி வருமானம் ஈட்டி வரும் பள்ளிவாசல் நிர்வாகம் மாநகராட்சியின் அறிவிப்பாணையை கண்டுகொள்ளாமல் இருப்பதை மாநகராட்சி கண்டிக்குமா?

தூத்துக்குடி மாநகராட்சி பாளை ரோட்டில் வ.உ.சி. கல்லூரி வெளிப்புறம் நீர் நிலை சேனல்(பைப் லைன்) செல்லும் இடத்தின் மேலே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பொழுதுபோக்கிற்காக கட்டுமான பணி செய்து வருகிறது. வரும் காலங்களில் நீர்நிலை சேனலில் (பைப் லைனில்) பாதிப்பு ஏற்பட்டால் கட்டிடத்தை உடைத்தா பாதிப்பை சரிசெய்வது? மாநகர் முழுவதும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கிறிஸ்துவர்கள் கெபிக்கள் அமைத்தும் முஸ்லிம்கள் கட்டிடங்கள் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட வேண்டிய நிலங்கள் பல ஏக்கர் இருக்கும் போது இந்து வழிபாட்டுத் தலங்களை மட்டும் இடிக்க முயற்சி செய்வது நியாயமா?இவ்வாறு அவர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

இயற்கையை நேசிப்பவன்Jul 4, 2020 - 09:14:38 PM | Posted IP 162.1*****

வ.ஊ.சி கல்லூரி மைதானம் (வெளிய) அருகில் ஒவ்வொரு மழைக்காலமும் மழை நீர் தேங்கி நிற்கும் பள்ளி செல்லும் போது சிரமமா இருக்கும் அங்கு ஆக்கிரமிப்பை அகற்றி, பாதாள சாக்கடையை கழற்றி (தெப்பக்குளம் போல்) ஒரு குளமாவது அமையுங்கள் அல்லது மழைநீர் சேகரிப்பு பெரிய கிணறு அமையுங்கள்.. அப்போதுதான் நிலத்தடி மட்டம் உயரும் .. இல்லையென்றால் மாநகராட்சி தோண்டி தோண்டி சாக்கடையாக மாற்றிவிடுவார்கள் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory