» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமி பாலியல் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனி 4, ஜூலை 2020 8:08:00 PM (IST)


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகிலுள்ள ஏம்பல் கிராமத்தை சார்ந்த ஜெயப்பிரியா என்ற 7 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து  படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், நீதி கிடைக்க வலியுறுத்தியும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். அரசியல் அமைப்பு அதிகாரத்தின் மாவட்ட தலைவர் கப்பிகுளம் முனியசாமி, மாமன்னர் பூலித்தேவர், மக்கள் நல இயக்கம் நிறுவன தலைவர் செல்லத்துரை என்ற செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஐந்தாம் தூண் நிறுவனர் சங்கரலிங்கம், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட தலைவர் மருதம் மாரியப்பன், ஐஎன்டியுசி மாவட்ட பொதுசெயலாளர் ராஜசேகரன், தாவீது ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோசமிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory