» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் சம்பவம், பொய் தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை : சிபிசிஐடி எச்சரிக்கை

சனி 4, ஜூலை 2020 7:25:47 PM (IST)

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பொய்யான தகவல்களை உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சிபிசிஐடி போலீசார் எச்சரித்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பொய்யான தகவல்களை உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பரப்பபட்டு வருவதாக சிபிசிஐடி போலீசார் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும்  பொய் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும்.  பொய் தகவல்களை நீக்காதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் எச்சரித்துள்ளனர்.

மதுரை சிறைக்கு மாற்ற திட்டம்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசாரை மதுரை சிறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயராஜ், பெனிக்ஸ் இறந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் கைது செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக 2  சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 பேரை மதுரைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory