» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீதி துறையை மிரட்டும் காவல்துறையைக் கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

செவ்வாய் 30, ஜூன் 2020 12:35:24 PM (IST)சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி துறையை மிரட்டும் காவல் துறையைக் கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல்துறையினர் மிரட்டியதாக  மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் இமெயில் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதித்துறையை மிரட்டும் காவல்துறையை கண்டித்தும், சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில்,  வழக்கறிஞர்கள் அதியசயகுமார், கிஷிங்கர், சாமுவேல் ராஜேந்திரன், அரி ராகவன், சுரேஷ்குமார், செல்வின், இளையவளவன், சந்தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory