» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை - மகன் மரணத்தில் போலீசார் மீது வழக்குப்பதிய முகாந்திரம் உள்ளது : உயர்நீதிமன்ற மதுரை கிளை

செவ்வாய் 30, ஜூன் 2020 11:53:43 AM (IST)

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வந்த தன்னை மிரட்டல் விடுக்கும் வகையில் காவல்துறையினர் பேசியதாக மாஜிஸ்திரேட் மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் இமெயில் மூலமாக புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று குற்றவியல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்த உயர் நீதிமன்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை,  புகாருக்கு உள்ளான தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன்  இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இதன்படி, தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன், ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர்  விசாரணைக்கு ஆஜர் ஆகினர். அதேபோல், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் ஆஜரானார்.மிரட்டல் புகாருக்கு உள்ளான சாத்தான்குளம் காவலர் மகாராஜனும் நேரில் ஆஜர் ஆனார்.  இந்த வழக்கு விசாரணையின் போது, "ஜெயராஜ், பெனிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory