» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம் : பொறுப்பு அதிகாரிகள் நியமனம்

செவ்வாய் 30, ஜூன் 2020 11:45:24 AM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, 24 மணி நேரமும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணி செய்யும் விதமாக சமூக பாதுகாப்பு துறை தனி வட்டாட்சியர் செந்தூர்ராஜன், துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் ஆகியோரை நியமித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் காவல் நிலையம் வந்ததை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி தடயங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes







Thoothukudi Business Directory