» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 30, ஜூன் 2020 11:08:35 AM (IST)

கோவில்பட்டியில் கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இனாம் மணியாச்சி, மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகைய்யா. இவரது மகள் ராஜேஸ்வரி (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.காம்., 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி வீட்டை விட்டு சென்ற அவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சண்முகைய்யா கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

புகாரின் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் சென்றது தெரிவந்துள்ளது. கோவில்பட்டி சாந்தி நகரைச் சேர்ந்த பொன்பாண்டி மகன் சந்தோஷ் (25) ஆட்டோ டிரைவரான இவரது ஆட்டோவில் ராஜேஸ்வரி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் ஊரை விட்டுச் சென்றது தெரியவந்தது. போலீசார் இருவரையும் தேடி் வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Anbu Communications


Black Forest Cakes






Thoothukudi Business Directory