» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது குடிக்க தாய் பணம் கொடுக்காததால் வாலிபர் தற்கொலை!

செவ்வாய் 30, ஜூன் 2020 10:56:07 AM (IST)

கடம்பூரில் மது குடிக்க தாய் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த வாலிபர்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் மகன் மதன்ராஜ் (21), தனியார் நிறுவன ஊழியர். மேலும், மதுபோதைக்கு அடிமையான இவர் தினமும் மது குடித்துள்ளார். இதனை அவரது தாயார் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது தாயரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் மனம் உடைந்த மதன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications




Black Forest Cakes






Thoothukudi Business Directory