» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து 7 பவுன் நகை திருட்டு: மர்ம நபர் கைவரிசை

செவ்வாய் 30, ஜூன் 2020 10:42:02 AM (IST)

குளத்தூர் அருகே வீடுபுகுந்து 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள கலைஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் பரமசிவன் (38). இவர் நேற்று மதியம் தனது வீட்டருகே உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி, வீட்டின் உள்ளே பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுவிட்டாராம். இதன் மதிப்பு ரூ.1லட்சத்து 12 ஆயிரம் ஆகும். இதுகுறித்து பரமசிவன், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Black Forest Cakes


Anbu Communications






Thoothukudi Business Directory