» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஷம் குடித்த இளம்பெண் - 3வயது மகள் பரிதாப சாவு: 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை!!

செவ்வாய் 30, ஜூன் 2020 10:17:56 AM (IST)

ஸ்ரீவைகுண்டத்தில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் குடித்தார். இதில் தாய் மற்றும் 3வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் கள்ளவாண்ட கோவில் தெருவைச் சேர்ந்தவர் உலகுராஜ். விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா தேவி (30). இவர்களுக்கு நெல்சன் ராபர்ட்(6), என்ற மகனும், அபிஷா (5), ஜெனிஷா (3) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். நிர்மலாதேவிக்கு வயிற்றில் கட்டி இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குணமாகாததால் மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அவர் தனக்கு பின்னர் தன்னுடைய குழந்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கருதினார். இதனால் தனது மனதை கல்லாக்கிக்கொண்டு தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க கொடுத்தார். பின்னர் அவரும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார். இதனால் 3 குழந்தைகளும் கதறி அழுதனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நிர்மலாதேவி மற்றும் அவருடைய 3 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை நிர்மலாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சிறிது நேரத்தில் சிறுமி ஜெனிஷா உயிரிழந்தாள். மேலும் 2  குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவி உள்ளாட்சி தேர்தலில் இந்த பகுதியில் அதிமுக ஒன்றிய வார்டு கவுன்சிலர் வேட்பாளராக களம் இறங்கி தோல்வியை தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes







Thoothukudi Business Directory