» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் இல்லை ! : அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

திங்கள் 29, ஜூன் 2020 6:16:40 PM (IST)

தூத்துக்குடியில் உபரி ஆசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரங்களை வரும் ஜூலை 5-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் முதல் சம்பளம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆசிரியர்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனியார் பள்ளிகளில் பல ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில் உபரி ஆசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory