» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிதாக 30பேர் நியமனம் : எஸ்பி உத்தரவு

திங்கள் 29, ஜூன் 2020 3:40:50 PM (IST)

தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30பேர் புதிதாய நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸார் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்ப்பட்டார். மேலும் அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்ட, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர்  பெர்னாட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மணிமாறன், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முத்துமாரி, தட்டார்மடம், திருச்செந்தூர், நாசரேத், குலசேகரபட்டணம், மெஞ்ஞானபுரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 17 தலைமைக் காவலர்கள், தூத்துக்குடி ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் 10 காவலர்கள் என மொத்தம் 30பேர் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக அனைவரும் பணியில் சேர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory