» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வியாபாரி அடித்துக் கொலை : மைத்துனர் வெறிச்செயல்

திங்கள் 29, ஜூன் 2020 8:32:00 AM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் குழந்தைகள் கண் முன்னே வியாபாரியை மைத்துனர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி முத்தையாபுரம், எம் தங்கம்மாள்பும் 2வது தெரு,  ராமர் காம்பவுண்டைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் சுப்பையா (43). கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி  தமிழ்ச்செல்வி (31). இந்த தம்பதியருக்கு லோகேஷ் (14), கௌரி (12), ஹரிஷ்கா ஸ்ரீ (10) என 3 குழந்தைகள் உள்ளனர். தம்பதியர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது போல் நேற்றும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனை தட்டிக் கேட்பதற்காக தமிழ்ச்செல்வியின் உடன்பிறந்த தம்பி செல்வகுமார் (28), மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரும் அங்கு சென்றுள்ளனர். நள்ளிரவு 12 மணியளவில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் மண்வெட்டி கணையால் சுப்பையாவை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அவர் உயிருக்குப் பயந்து வீட்டின் கழிவறைக்குள் பதுங்கியுள்ளார். ஆனாலும் அவர் விடாமல் துரத்தி சராமாரியாக அடித்துக் கொலை செய்துள்ளார். 

அவரது மனைவி, குழந்தைகள்  கண்முன்னே இந்த கொடூர கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இதுகுறித்து தகவல் அறிந்து முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்ட சுப்பையாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக முருகேசன் அவரது நண்பர் முத்தையாபுரம் பாரதிநகரைச் சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory