» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் அமமுக நிர்வாகியின் மகன் பரிதாப பலி

ஞாயிறு 28, ஜூன் 2020 11:56:46 AM (IST)

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் அமமுக நிர்வாகியின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பால்பாண்டி, இவர் தூத்துக்குடி மாவட்ட அமமுக வர்த்தக அணி நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் ஸ்டான்லி கமலவேல் (22). இவர் புதுக்கோட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஜிம் வைத்து நடத்தி வருகிறார்.  இன்று காலை சுமார் 5 மணியளவில் இவர் புதுக்கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி பாளை., ரோட்டில் உள்ள  வ.உ.சி கல்லுாரி அருகே வரும் போது, பைக் திடீரென நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes





Anbu Communications




Thoothukudi Business Directory