» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது : மோகன் சி.லாசரஸ் பேச்சு!

ஞாயிறு 28, ஜூன் 2020 11:22:54 AM (IST)சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பில் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்று சமூகவலைத் தளங்கள், உள்ளுர் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பான நாலுமாவடி திறப்பின் வாசல் ஜெபத்தில் மோகன் சி. லாசரஸ் பேசினார்.
 
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடையக் கூடாரத்தில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை திறப்பின் வாசல் ஜெபம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா கால ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் சமூக வலைத்தளங்கள், உள்ளுர் தொலைக்காட்சிகள், சேட்லைட் தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த மாதமும் திறப்பின் வாசல் ஜெபம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.இதில் இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்காகவும், இந்திய தேசமக்கள் இரட்சிக்கப்படவும், எழுப்புதல் அக்னி போடப்படவும் பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. 

பின்னர் சகோ. மோகன் சி. லாசரஸ் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தந்தை, மகன் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவையே ஒரு அசைவை உண்டாக்கியுள்ளது. தகப்பன், மகன் மரணம் அந்த குடும்பத்தையே நிலைகுணிய வைத்து விட்டது. 2 ஆண்களும் இல்லாதது அந்த குடும்பத்தின் தாயாருக்கும், 3 சகோதரிகளுக்கும் ஆறுதல் கிடைக்க சிறப்பு பிரார்த்தனையை நாம் செய்ய வேண்டும். மனிதனுடைய வார்த்தை ஆறுதல் தரமுடியாது. இறைவன்தான் அந்த குடும்பத்திற்கு ஆறுதலும், பாதுகாப்பும் கொடுக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. தந்தை மகன் மரணம் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. 

காவல்துறையில் நல்லவர்களும், நேர்மையானவர்களும் உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அந்த குடும்பத்திற்கு நீதி கிடைத்திடவும், குடும்பத்தினர் சோகம், துக்கம் நீங்கி ஆறுதல் கிடைத்திடவும் இறைவனிடம் கருத்தாய் ஜெபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி சிறப்பு பிரார்த்தனையை அந்த குடும்பத்திற்காக ஏறெடுத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory