» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்ஜிஆர் பார்முலா மீண்டும் அமல்படுத்தபடுமா ? : பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வியாழன் 25, ஜூன் 2020 1:12:43 PM (IST)

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் சில காவல்துறை அதிகாரிகள் வாட்ஸ்ஆப் குழுக்கள் அமைத்து ஜாதி ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், இதை உடனே டிஜிபி தலையிட்டு தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ்ஆப் அறிமுகமான பிறகு பொதுவாகவே பள்ளி,கல்லுாரி நண்பர்கள் குழு, அலுவலக ஊழியர்கள் குழு என அனைத்திற்கும்  வாட்ஸ்ஆப் குழுக்கள் தொடங்கப்பட்டு விட்டன. இதில் ஒரு படி மேலே சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சில காவல்துறை அதிகாரிகள் தங்கள் ஜாதியை சேர்ந்த அதிகாரிகளை சேர்த்து வாட்ஸ்ஆப் குழுக்கள் வைத்து ஜாதி ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பொதுவாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகியவை பதட்டம் நிறைந்த மாவட்டங்களாகும். இங்கு ஜாதிய மோதல்கள் அவ்வப்போது தலை தூக்குவது வழக்கம். முன்பு அதிக ஜாதிய மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தான் அவை குறைந்து அமைதி நிலவி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் சில காவல்துறை அதிகாரிகள் வாட்ஸ்ஆப் குழுக்கள் அமைத்து ஜாதி ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த போக்கினால் மறுபடியும் ஜாதி கலவரம் ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முன்பு காவல்துறை டிஐஜி, மற்றும் எஸ்பி.,ஆகியோர் திடீரென ஏதாவது ஒரு காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்துவது வழக்கம். அங்கு எப்ஐஆர் மற்றும் காவல்நிலையங்களில் உள்ள ஆவணங்களை சரி பார்ப்பார்கள். தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது போல் நடப்பதில்லை என்றும் காவல்துறையில் பணிபுரிவோர் மீது புகார்கள் அளித்தால் அதை உயரதிகாரிகள் கண்டு கொள்வதேயில்லை. அதன் விளைவு தான் சாத்தான்குளம் சம்பவம் போன்று வெளிப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


எம்.ஜி.ஆர் பார்முலா அமல்படுத்தப்படுமா ?


தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்  ஜாதி மோதல்களை தவிர்க்க ஒரு வழிமுறையை கையாண்டார். அதன்படி வட தமிழக மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை தென் தமிழகத்திலும், தெற்கே உள்ளவர்களை வடக்கேயும் பணியமர்த்துவது வழக்கம். இதனால் ஜாதிய மோதல்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நடைமுறை பின்பற்றபடவில்லை என கூறப்படுகிறது.  எனவே சம்பந்தபட்ட காவல் அதிகாரிகளின் ஜாதி ரீதியிலான வாட்ஸ்ஆப் குழுக்களை சைபர்கிரைம் போலீசார் கண்காணித்து அதை கலைக்க உத்தரவிட வேண்டும். இந்த விஷயத்தில் உடனே தமிழக டிஜிபி தனி கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

pandiJun 26, 2020 - 02:43:57 PM | Posted IP 108.1*****

SUPER

KumarJun 26, 2020 - 09:34:48 AM | Posted IP 162.1*****

Police atrocities should be stopped at any cost. In recent times, it is going on continuously

KumarJun 26, 2020 - 09:34:48 AM | Posted IP 162.1*****

Police atrocities should be stopped at any cost. In recent times, it is going on continuously

M.sundaramJun 25, 2020 - 03:57:35 PM | Posted IP 162.1*****

There are some deficiency in Police training. It must be removed. Then only death at police custody be reduced. Second Stern disciplinary action must be initiated against the erring official. Favoritism should find no place in the inquiry.

சாமான்யன்Jun 25, 2020 - 01:26:23 PM | Posted IP 162.1*****

தங்கள் சமூகம் பெரும்பான்மை இல்லாத இடங்களுக்கு உடனடியாக தூக்கி அடிக்கப்படணும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory