» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் சம்பவம் அமெரிக்காவை மிஞ்சிய கொடூரம் : சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்

புதன் 24, ஜூன் 2020 12:27:46 PM (IST)சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளை சிறையில் இறந்த சம்பவத்தினை அமெரிக்காவில் சமீபத்தில் கறுப்பினத்தவர் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் இறந்த சம்பவத்தினை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

அமெரிக்காவில் சமீபத்தில் போலீசாரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின் வடு இன்னும் மாறாத சூழலில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தை சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேற்று முழுவதுமே பரபரப்புடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து சாத்தான்குளத்தை சேர்ந்த காவல்துறையினர் கூண்டோடு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று அந்த சம்பவத்தை கண்டித்து கடையடைப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நல்ல விஷயங்கள் நடந்தாலும், சில அசம்பாவிதங்கள் நடந்தாலும் உடனே சமூக வலை தளங்களில் அது பற்றி பரபரப்புடன் விவாதிக்கப்பட்டு டிரெண்டாகி விடுகிறது. அந்த வகையில் கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை மகன் இறந்த சம்பவம் குறித்தே நேற்று சமூக வலை தளங்களில் அதிக கருத்துகள் பதிவிடப்பட்டது. மேலும் பலரும் இதற்கு கண்டனங்களையும் பதிவு செய்திருந்தனர். ஆனால் சிலர் ஒரு படி மேலே சென்று அமெரிக்காவில் சமீபத்தில் போலீசாரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம் போன்று சாத்தான்குளம் சம்பவம் உள்ளதாக ஒப்பிட்டு கருத்துகள் கூறியுள்ளனர். 

ஏற்கனவே கரோனா வைரஸ் பரவலால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. பலர் வாழ்வாதாரம் இழந்து அடுத்து என்ன செய்வது என தவித்து வரும் சூழலில் அதை எப்படி தடுப்பது என ஆலோசனை நடத்தலாம். அதை விடுத்து இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது வேதனையளிப்பதாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

சட்டப்படி சாதிப்போம்Jun 25, 2020 - 02:32:20 PM | Posted IP 108.1*****

கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம் கொலை செய்த அதிகாரி ஜெயிலில் உள்ளார். அதிகாரியின் மனைவி விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

சரவணக்குமார்Jun 25, 2020 - 06:41:40 AM | Posted IP 162.1*****

இந்த சம்பவம் நடக்கும் போது வியாபாரிகள் சங்கம் உள்ள நபர்கள் ஒற்றுமை செயல்பாடவில்லை என்று தெளிவாக தெரிகிறது.வியாபாரிகள் ஒற்றுமையுடன் இருந்தால் இந்த சம்பவம் நடக்காது என்று நினைக்கிறேன் ஐயா இறந்த இரு ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி🙏🕉️

Shanmugam SJun 24, 2020 - 11:52:59 PM | Posted IP 162.1*****

இன்னும் உடல்களை வாங்கவில்லை.சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் ஓயாது.

மனிதன்Jun 24, 2020 - 09:23:48 PM | Posted IP 108.1*****

தயவு செய்து விரும்ப தகாத செயல் என்று சொல்லாதீர் , 2 உயிர் காரணம் இல்லாமல் போய் விட்டது....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory