» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசை கண்டித்து தூத்துக்குடியில் முழு கடையடைப்பு

புதன் 24, ஜூன் 2020 10:27:18 AM (IST)கோவில்பட்டி கிளைசிறையில் தந்தை, மகன்  இறந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தை சம்பவத்தால் சாத்தான்குளம் முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை வேண்டும், அவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.அதன்படி இன்று தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தான்குளம், ஆத்தூர், நாசரேத், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.மக்கள் கருத்து

மகேஸ்வரிJun 24, 2020 - 11:15:18 AM | Posted IP 162.1*****

தந்தை மகன் இருவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். போலீசார் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory