» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை-மகன் மரணம்: மருத்துவக்குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை, நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 23, ஜூன் 2020 6:37:57 PM (IST)

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் இருவர் உடலையும் மருத்துவர்கள் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை - மகன் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது கணவர் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸின் உடலை மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி புகழேந்தி, 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார் மேலும், பிரேத பரிசோதனை விடியோவாக பதிவு செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து

AustinJun 24, 2020 - 03:26:23 PM | Posted IP 162.1*****

Let the court dismiss those from their irresponsible job and post this family members as replacement, that would be more justifiable. Are we living safe and we are in democratic country, where this SI and his family they are the nationalities of India are they from neighbour country.

அருண்Jun 24, 2020 - 09:51:16 AM | Posted IP 173.2*****

துன்புறுத்தி கொலை செய்வது மிக கொடூரம். இது தகாத செயல்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory