» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழ‌ப்பு : சி.பி.ஐ. விசாரணை கேட்கும் காங்கிரஸ்!

செவ்வாய் 23, ஜூன் 2020 6:26:59 PM (IST)

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் மரணமடைந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இச் சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரும் இறந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

ஊரடங்கு நேரத்தில் கடை திறந்ததாக கூறி அவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் சாத்தான்குளம் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாக்கியதில் அவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று கூறி சாத்தான்குளம் பகுதி மக்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.  தந்தை, மகன் இறப்பில் காவல் துறையினர் மேல் சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த வழக்கை காவல் துறையினரே விசாரித்தால் நிச்சயம் நீதி கிடைக்காது. எனவே காவல்துறையினர் சம்பந்தபட்ட இந்த வழக்கை மத்திய புலனாய்வு துறையினர் விசாரித்து குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.  மேலும், அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory