» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு தேவையில்லை: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

செவ்வாய் 23, ஜூன் 2020 12:12:49 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு தேவையில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

சமுத்திர சேது ஆபரேசன் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது. தமிழகத்தை சேர்ந்த 195 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் உட்பட 198 பேர் வந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறைமுக சபை அதிகாரிகள் வரவேற்றனர். கப்பல் மூலம் வந்த அனைவரும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இதனை தொடர்ந்து குடியுரிமை சோதனைக்கு பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார், ‘’வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பொருட்டு மத்திய அரசின் சமுத்திரக் சேது திட்டத்தின் கீழ் மூன்றாவது கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலமாக இரண்டு முறை பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று வந்த ஐஎன்எஸ் ஐராவத் கப்பலில் நெல்லை,தூத்துக்குடி,விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 25 நபர்கள் உள்பட மொத்தம் 200 பேர் வந்துள்ளனர்.இதில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 64 பேர் உள்ளனர்.

நமது மாவட்டத்திற்கு அடுத்த கட்டமாக ஜூன் 28ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து 700 இந்தியர்களை தூத்துக்குடி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை வெளியிலிருந்து வந்தவர்கள், எதாவது நிகழ்ச்சி மூலம்தான் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதுவரை சமூக தொற்று ஏற்படவில்லை. முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். தொற்று உறுதி என கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இப்போதைக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு தேவையில்லை. அதற்கான அவசியங்கள் ஏற்படவில்லை’’ என்றார்.


மக்கள் கருத்து

இவன்Jun 25, 2020 - 09:32:43 AM | Posted IP 108.1*****

வட நாட்டு கலெக்டர் நம்ம ஊருக்கு விளையாட வந்தவர்

KaniJun 25, 2020 - 08:04:04 AM | Posted IP 162.1*****

Please Sir.Declare lock down for at least 10 days.We are scared.

VIGNESHWARANJun 25, 2020 - 07:14:55 AM | Posted IP 162.1*****

Want to full lockdown in tuticorin dist mohan

MalarJun 24, 2020 - 10:21:03 PM | Posted IP 162.1*****

Please lockdown tuticorin

VigneshJun 24, 2020 - 08:52:57 PM | Posted IP 108.1*****

Lockdown அவசியம் சமூக பரவல் எட்டும் வரை வேடிக்கை பாக்க வேணாம்

IsaiJun 24, 2020 - 06:25:28 PM | Posted IP 162.1*****

Please lockdown potunga. Yelarum chennai la irunthum varanga velila niraya urla irunthu varanga. Check panavum mataikanga. Kadaila distance maintain pana mataikanga. Chennai mari bara varaikum wait panringala lockdown potunga sir. Velila pogavum payama iruku yentha things um vaanga payama iruku. Corona romba spread aaguthu ungaluku therilaya Sikiram lockdown potunga sir

SathishJun 24, 2020 - 02:40:46 PM | Posted IP 173.2*****

People who are corona carriers and dont showing any symptoms are freely roaming around cities. Unless they recognising the symptoms, virus can be spread to many people before. So kindly make a lockdown and improve the testing capabilities.

WilsonJun 24, 2020 - 02:28:00 PM | Posted IP 162.1*****

Lockdown.very.must

WilsonJun 24, 2020 - 02:23:42 PM | Posted IP 108.1*****

Lockdown.thoothukudi

Nisha BalaJun 24, 2020 - 01:33:58 PM | Posted IP 173.2*****

Please sir full lockdown podunga... Pakathu oorla irunthulam varanga inga stay panuranga... Chennai pola tuticorin makkalukum adhigama vanthurumonu Bahama iruku sir... Please request panni kekurom

Nisha BalaJun 24, 2020 - 01:28:42 PM | Posted IP 162.1*****

Tuticorin makkalidam corona thottru erpattu irukinrathu... Innum thottru adhigam nadanthu kondirukirathu... Veliye sellavum bayamaga irukinrathu... Kadaigaluku sendralum yarum distance maintain pannamal irukinranar... Thottru adhigama ithuve karanam... Please sir lockdown podurathuku support pannunga.. Ipdiye vittu vital makkal anaivarum padhika paduvar...

A.M.RahmanJun 24, 2020 - 01:07:22 PM | Posted IP 108.1*****

கபசுர குடிநீா் அனைத்து பகுதிக்கும்அரசே அரசு மருத்துவா் மூலம் வழங்க வேண்டும்...

KannanJun 24, 2020 - 12:45:10 PM | Posted IP 162.1*****

Lock down is very must

BalamuruganJun 24, 2020 - 12:11:02 PM | Posted IP 162.1*****

Super relaf medicine must in government

V. KanimoliJun 24, 2020 - 08:41:44 AM | Posted IP 162.1*****

Sariyana mudivu

EzhilJun 24, 2020 - 08:33:20 AM | Posted IP 162.1*****

Tuticorin la corona test pannama ethanayo corona patient veliya suthittu irukkangannga apdi illama epdi daily corona spread agittu irukku new patient ku yarkitta irunthu varuthu?

GopalJun 24, 2020 - 12:23:06 AM | Posted IP 108.1*****

Worst reply from collector. Please go for lockdown.

Moses kephaJun 23, 2020 - 11:17:37 PM | Posted IP 162.1*****

Tharpothaikku lockdown thevai ill ai.

Bala GangadharanJun 23, 2020 - 09:26:48 PM | Posted IP 108.1*****

Apadi lockdown pota motha nala solliruga sir naga sotha uruku poirom

Rejith NatesJun 23, 2020 - 05:16:17 PM | Posted IP 173.2*****

It is very important to wear nose mask and keep social distancing. Authorities have limitations each and every person should take care to protect them from the disease. We forgot/assault our responsibilities. So kindly take necessary steps to protect you from CORONA.

rajaJun 23, 2020 - 04:26:46 PM | Posted IP 162.1*****

ithaye than antha taylor m sonan

tamilanJun 23, 2020 - 03:36:46 PM | Posted IP 108.1*****

corona tuty la athigama varuthu. corona sari aaguthunu ninaichu step yetukama irukinga. theriyama niraiya per velila poitu than irukanga chennai peoples niraiya per irukanga. 2nd gate side chennai la irunthu theriyama vanthu irukanga. so konjam step yetuthu lockdown potunga sir.

thoothukudiJun 23, 2020 - 03:32:55 PM | Posted IP 162.1*****

enna sir solringa , chennai la irutnhu niraya peru theiriya vanthu stay panranga , neenga ooratangu thevai ila nu solringa ,, please ethathu step etunga, corona thoothukudi la rompa spread aguthu , konjam lockdown palanalmla , y vendam nu solringa ,, oor makkal nangathan payapatavendi iruku neenga asault ah irukinga,

GaneshJun 23, 2020 - 01:26:16 PM | Posted IP 162.1*****

Worst collector.. Tuticorin needs full lockdown immediately..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory