» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்திய அளவில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் : இரண்டு விருதுகள் வழங்கல்

திங்கள் 22, ஜூன் 2020 8:48:40 PM (IST)


தூத்துக்குடி மாவட்டம்  தூய்மை  பாரத  இயக்கத்தின் கீழ் இந்திய அளவில்  முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு இரண்டு விருதுகள்  தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு ஸ்கோச் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் தமிழகத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கலந்துகொண்டு, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகளின் புகைப்பட ஆதாரங்கள் மற்றும் இதுவரை மாவட்டத்தில்  நடைபெற்றுள்ள பரப்புரை பணிகள் ஆகிய  விபரங்களுடன் திறந்த வெளியில் மலம்  கழித்தல்  அற்றல்   என்ற  தலைப்பில் 06.02.2020 அன்று  தலைநகர்  டெல்லியில்  நடைபெற்ற  நிகழ்ச்சியில் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பல்வேறு பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்டதால் தூத்துக்குடி மாவட்டம் காலிறுதிக்கு ஆர்டர் ஆப் மெரிட் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டது.

மேலும், தூத்துக்குடி  மாவட்டத்தின்  தூய்மை பாரத  இயக்கம்  குறித்த  ஆவணத்  தொகுப்பு ஸ்கோச் இணையதளத்தில்   இ எக்சிபிசன் ஆக பொதுமக்களின் பார்வையிட்டு மதிப்பீடு செய்து வாக்கு அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

பின்னர் இ ஸ்கோச் ( E-SKOCH)  விருது வழங்கும் விழாவில் பிரதிநிதிகள் இணையதளம் மூலமாக பங்கேற்கும் நிகழ்வு டெல்லியில் வைத்து  20.06.2020 அன்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பாரத பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வாக்குகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத  இயக்கத்தில்  இந்திய  அளவில்  முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட், ஸ்கோச் கோல்டு  ஆகிய இரண்டு விருதுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

இவன்Jun 23, 2020 - 10:46:24 AM | Posted IP 162.1*****

ஊரெல்லாம் தேவையில்லாத இடத்தில பாதாள சாக்கடையால் தூத்துக்குடி ஊரெல்லாம் நாறிப்போய் 2 மடங்கு கொசுக்கள் பெருகி, நாசமாகி போய் கொண்டிருக்கிறது, கலெக்டர் பங்களாவில் சொகுசாக வாழும் வட நாட்டுக்காரன்க்கு தெரியாது ..

ப. சுகுமார்Jun 22, 2020 - 09:42:07 PM | Posted IP 173.2*****

விருது வாங்கியதுக்கு சந்தோசம். அப்படியே கொரோனா இல்லாத ஊராக தூத்துக்குடியை மாற்றுங்க. தூத்துக்குடியில் கொரானா தாக்கம் அதிகரித்து வருவதாக சொல்றாங்க.

GANESHAN .KJun 22, 2020 - 09:39:08 PM | Posted IP 108.1*****

Congratulations to our district collector and the concerned officials. Thanks to our people for their support

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory