» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா நோயாளி தவறுதலாக டிஸ்சார்ஜ் : தீவிர தேடலில் அதிகாாிகள்‍‍ - ஆட்சியர் விசாரணை

திங்கள் 22, ஜூன் 2020 8:03:37 PM (IST)

தூத்துக்குடியில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மாற்றி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை தேடும் பணியில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி டூவிபுரம் 4வது தெருவை சேர்ந்த ஒருவர் கடந்த 19 ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது பெயரைக் கொண்ட மற்றொருவரும் கடந்த 20 நாள்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று கரோனா முழுவதும் குணமடைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வு அரசு மருத்துவமனையில் நடந்தது. இதில் 20 நாள்களுக்கு முன் சிகிச்சை பெற்ற நபரை வீட்டுக்கு அனுப்புவதற்கு பதிலாக தவறுதலாக டூவிபுரம் 4வது தெருவை சேர்ந்தவரை மாற்றி அனுப்பி வைத்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி உடனே அரசு மருத்துவமனை டீனை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தார். 

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இதுகுறித்து தெரியப்படுத்தி தவறுதலாக வீட்டிற்கு அனுப்பபட்ட நபரை ஒரு மணி நேரத்தில் மீண்டும் அரசு மருத்துவமனையில்  சேர்க்க உத்தரவிட்டார். உடனே மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் டூவிபுரம் 4வது தெருவில்  உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நகர் முழுவதும் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் மாற்றி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory