» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண தாம்பூழ பையில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் : கரோனா எதிரொலி

வியாழன் 4, ஜூன் 2020 11:26:25 AM (IST)


தூத்துக்குடியில் திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தாம்பூழ பையில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மாரியப்பன். சி.ஆர்.பி.எப் வீரர். இவரது தங்கை கோகிலா - நாகமணி திருமணம் எளிமையாக நடந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக உறவினர்கள் மாஸ்க் அணிந்து விழாவில் பங்கேற்றனர். மணமக்களும் மாஸ்க், கிளவுஸ் அணிந்தபடி கல்யாண சடங்குகளை நிறைவு செய்தனர். இதையடுத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தாம்பூழ கவரில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் வழங்கப்பட்டது. 

இது குறித்து சி.ஆர்.பி.எப் வீரர் காசி கூறுகையில்,   திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். ஆனால் கரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுனை மதிக்க வேண்டும் என்பதால் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தோம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். வருகை தந்தவர்களுக்கு தாம்பூழ கவரில் மாஸ்க் வழங்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

AshokJun 5, 2020 - 12:59:01 AM | Posted IP 108.1*****

காலத்திற்கு ஏற்ப மாறும், சடங்குகள் , அருமை,

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory