» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது

வியாழன் 4, ஜூன் 2020 11:22:49 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் சாமதுரை மகன் சரோ (45) இவர் நேற்று மட்டக்கடை பகுதியில் உள்ள கடையில் புரோட்டா வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரோ தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இதுதொடர்பாக தூத்துக்குடி பெரிய மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ராஜதுரை மகன் சந்தனராஜ் (39), வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சுதர்சன் (27), செயின்ட் மேரீஸ் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெரிட்டன் (28) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory