» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதி தனியார் நிறுவன காவலாளி பலி

வியாழன் 4, ஜூன் 2020 10:58:28 AM (IST)

தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன காவலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வர்த்தக ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சங்கரசுப்பு (56). இவர் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோடு, சர்வீஸ் ரோட்டில் சென்ற போது டிப்பர் லாரி இவரது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த சங்கரசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் விபத்து தொடர்பாக லாரியை ஓட்டி வந்த ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகரம் அருகே உள்ள மீனாட்சிபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் செல்வநாயகம் (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

மற்றொரு விபத்து...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி,  நாலாட்டின்புதூர் அருகே உள்ள குருமலை வெங்கடாசலபுரம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் பேச்சிமுத்து (41). இவர் நேற்று இரவு ஊத்துப்பட்டியில் இருந்து திருமலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Black Forest Cakes


Anbu Communications




Thoothukudi Business Directory