» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் விசாகத் திருவிழா: களையிழந்து காணப்பட்ட கோயில் வளாகம்

வியாழன் 4, ஜூன் 2020 10:15:19 AM (IST)கரோனா ஊரங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் யாரும் இல்லாமல் நடந்தது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர விழாவான வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழா வசந்த விழாவாக பத்து நாள்கள் நடைபெறும்.  நிகழாண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக விழா தொடங்கவில்லை. 

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் களையிழந்து நடைபெற்றது. குறிப்பிட்ட அர்ச்சகர்கள் மற்ற கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.10 மணிக்கு சுப்ரபாத சேவையும் 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு விசாகத் திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கும் சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற காலங்கள் தொடர்ந்து நடைபெற்றது. பூஜைகளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருச்செந்தூர் முருகன் கோவிலில் எந்த திருவிழா நடைபெற்றாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள். விசாகத் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முடி காணிக்கை செலுத்தி கடலில் புனித நீராடி அங்கபிரதக்ஷணம் செய்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆனால் விசாகத் திருவிழா, ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாருமின்றி நடந்தது. கடற்கரை மற்றும் கோயில் வளாகம் களையிழந்து காணப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory