» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூகுளுக்கு அபராதம் செலுத்த சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 4, ஜூன் 2020 9:12:57 AM (IST)

சித்தரிக்கப்பட்ட தனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்த  சசிகலா புஷ்பாவின் ரூ.4லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பேஸ்புக், கூகிள் யூடியூப் ஆகிய இணையதளங்களில் தன்னை அவதூறாகவும் தவறாக சித்தரித்து போலியாக உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை நீக்குமாறு அந்த இணைய தளங்களுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கடந்த 2011ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதி ஒருவர் தனது கணவர் அல்லாத எதிர்க்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவரை மூடிய கதவுக்குப் பின்னால் சென்று சந்தித்தது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு. இதை பொது வெளியில் இருந்து மறைக்க விரும்புவதை பொதுநலன் சேர்ந்ததாக கருத முடியாது. அதுபோன்ற சந்திப்பிலும் அதை அவர் மறைக்க விரும்பும் பொதுநலன் உள்ளது என்பது அவர் தரப்பு வாதங்கள் கூறவில்லை.

எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது அல்ல மேலும் பேஸ்புக் கூகுள் யூடியூப் ஆகிய வலைதளங்களில் அவருடைய புகைப்படங்களை நீக்குமாறு கோரிக்கை விடுப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் பேஸ்புக் நிறுவனத்திற்கு 2 லட்சமும், கூகுள் மற்றும் யூட்யூப் ஆகிய இணையதளங்களுக்கு தலா ஒரு லட்சமும் வழக்கு செலவுக்காக அவதாரமாக வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ManiJun 4, 2020 - 11:08:25 PM | Posted IP 108.1*****

இவர் தாம் தூத்துக்குடி தொகுதி BJP MLA ஆக போகிறார்

facebook போராளீஸ்Jun 4, 2020 - 02:48:49 PM | Posted IP 162.1*****

நான் கூட போஸ்ட் போட்டேன் . என் மேல கேஸ் போட்டா கூட எனக்கு ஒரு லக்க்ஷம் கிடைக்குமே

makkalJun 4, 2020 - 10:11:34 AM | Posted IP 108.1*****

சூப்பர்

தமிழ்ச்செல்வன்Jun 4, 2020 - 10:03:01 AM | Posted IP 173.2*****

எப்படிப்பட்ட ஆளை MP ஆக கட்சி நியமித்துள்ளது. எப்படிப்பட்ட ஆளை தூத்துக்குடி மக்கள் மேயராக தேர்ந்து எடுத்து வைத்தார்கள்.

ராமநாதபூபதிJun 4, 2020 - 09:56:46 AM | Posted IP 162.1*****

அதான் சரி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory