» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 11பேர் டிஸ்சார்ஜ்

வியாழன் 4, ஜூன் 2020 8:49:18 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 11பேர் குணமடைந்ததால் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் இருவா் உயிரிழந்துள்ளா். இதுவரை 157 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா பிரிவில் 136 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, காயல்பட்டினம் பகுதிகளைச் சோ்ந்த 17 பேருக்கு கரோனா இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 294ஆக உயா்ந்துள்ளது. இதனிடையே  11 நோயாளிகள் குணமடைந்ததால் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்க்ள. 

மேலும்,  இலங்கையிலிருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்தோரில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 58 பேரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைக் கண்காணிப்பு மையத்தில் வைக்கப்பட்டனா். அவா்களது ரத்தம், சளி மாதிரிப் பரிசோதனையில் யாருக்கும் கரோனா இல்லை என நேற்று தெரியவந்தது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரைக் கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியில் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், காவல், வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினா் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory