» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா ரத்து

வியாழன் 4, ஜூன் 2020 8:38:05 AM (IST)

கரோனா தடுப்பு பொது முடக்கத்தால், திருச்செந்தூா் கோயிலில் இன்று நடைபெறவிருந்த வைகாசி விசாகத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர விழாவான வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்ாகும். இத்திருவிழா வசந்த விழாவாக பத்து நாள்கள் நடைபெறும். விழா நாள்களில் நாள்தோறும் உச்சிகால பூஜையை தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறும். பத்தாம் நாளான வைகாசி விசாகம் அன்று வசந்த மண்டபத்தில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சுவாமி சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறும்.

நிகழாண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக விழா தொடங்கவில்லை. இருப்பினும் ஆகம விதிப்படி வழக்கமான பூஜைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த வசந்த திருவிழா பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் வழக்கம்போல நடைபெறும் என திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து

MathewJun 4, 2020 - 03:52:18 PM | Posted IP 162.1*****

இன்று ஜூலை 4 என உள்ளது.அதை ஜூன் 4 என மாற்றவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory