» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தற்கொலை செய்த பெண்ணின் உடல் எரிப்பு: கணவர் கைது - உறவினர்கள் 13 பேர் மீது வழக்கு

புதன் 3, ஜூன் 2020 11:03:03 AM (IST)

சங்கரலிங்கபுரம் அருகே தற்கொலை செய்த பெண்ணின் உடலை தகனம் செய்தது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர்கள் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் ரகுநாத புரத்தைச் சேர்ந்தவர் சீனி மகன் வேல்முருகன்  (41) இவரது மனைவி மாயாதேவி (28) இந்த தம்பதியருக்கு கடந்த 18.4.2010-இல் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாயாதேவியின் தங்கைக்கு 3ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த திருமணத்திற்கு செல்ல வேண்டுமென மாயாதேவி தனது கணவரிடம் கூறியபோது அவர் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறினாராம். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் மனவேதனை அடைந்த மாயாதேவி கடந்த 1ம் தேதி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்து தகனம் செய்துள்ளனர். இதுகுறித்து வவ்வால் பட்டி  விஏஓவுக்கு தகவல் கிடைத்தது. அவர் சங்கரலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்த பெண்ணின் உடலை தகனம் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது கணவர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது  உறவினர்கள் 13பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications








Thoothukudi Business Directory