» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கிரேன் வாகனம் மோதி லாரி டிரைவர் பலி

புதன் 3, ஜூன் 2020 10:46:41 AM (IST)

தூத்துக்குடியில் கிரேன் வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் கணேசபுரம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஷரிப் மகன் மைதீன் ஷரிப் (65), லாரி டிரைவரான இவர் நேற்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி எதிரே உள்ள செட்டில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த கிரேன் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிந்து, கிரனை ஓட்டி வந்த தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த போஸ்கோ மகன் ரெனால்ட் வயது (37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory