» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

புதன் 3, ஜூன் 2020 10:36:20 AM (IST)

கடம்பூர் அருகே கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள பரிவல்லிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் சங்கிலி மாடத்தி  (16), நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி பாட்டி வீட்டிற்கு செல்வதாக வீட்டை விட்டு சென்ற அவர் அதன் பின் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுப்பையா கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory