» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

புதன் 3, ஜூன் 2020 7:52:40 AM (IST)

ஆத்தூர் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சத்தியமூர்த்தி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 29 ஆம் தேதி மாலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பத்திரகாளி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்த நிலையில் கீழ கீரணூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24), இசக்கிமுத்து (20) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory