» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது குடிக்க பணம் கேட்டு தாய், தந்தையை தாக்கிய மகன் கைது!

புதன் 3, ஜூன் 2020 7:45:32 AM (IST)

சாத்தான்குளம் அருகே மது குடிக்க பணம் தராததால் தாய், தந்தையை தாக்கியதாக மகனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் சுதந்திரபாண்டி (74). இவரது மகன் சுந்தரலால் (38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3குழந்தைகள் உள்ளனர். சுந்தர்லால் அவரது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் அவர் தாய் மற்றும் அவரது மனைவி ரேணுகா ஆகியோரை தாக்கினாராம். 

இதை பார்த்த அவரது தந்தை சுதந்திரபாண்டி கண்டித்தார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் சுந்தர்லால் தந்தையை அவதூறாக பேசி அவரையும் தாக்கினாராம். காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுதந்திரபாண்டி சாத்தான்குளம் காவல் நிலையத்தி்ல அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் வழக்குபதிந்து சுந்தர்லாலை நேற்று கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Black Forest Cakes


Anbu Communications



Thoothukudi Business Directory