» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொற்கொல்லர்களுக்கு நிவாரண கரோனா நிதி கிடைக்குமா? உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு

புதன் 3, ஜூன் 2020 7:38:10 AM (IST)

பொற்கொல்லர்களுக்கு நிவாரண கரோனா நிதி வழங்கக் கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேரூராட்சியில் சுமார் 4000 பொற்கொல்லர்கள் (தங்கநகை செய்யும் தொழிலாளாகள்) குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் 1000 பொற்கொல்லர்கள் தங்க ஆபரண நகைகள் செய்யும் தொழில் செய்து வந்தனர். தற்பொழுது தங்கம் விலை ஏற்றத்தின் காரணமாகவும், ஆபரண நகை செய்ய மிஷின் (இயந்திரங்கள்) புகுத்தபட்டுள்ளதால் தொழில் இன்றி பொற்கொல்லர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் கொரானா ஊரடங்கால் வேறு தொழிலுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வரும்  அமைப்பு சாரா கட்டுமான உடல் உழைப்பு தொழில் நலவாரியத்தில் பதிவு செய்த பொற்கொல்லர்கள் கரோனா நிவாரண நிதி கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர். 

இதுபற்றி சாத்தான்குளத்தை சோந்த பொற்கொல்லர்கள் முருகேசன், பேச்சிமுத்து, கணேசன் உள்ளிட்டோர் கூறுகையில் சாத்தான்குளம் நகரில் பரம்பரை பரம்பரையாக சுமார் 1000 பொற்கொல்லராகிய நாங்கள் தங்க நகை ஆபரணம் செய்யும் தொழில் செய்து வந்தோம். கலை நயமாக செய்யப்பட்ட தங்க நகை ஆபரணங்களை சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற தமிழகத்திலுள்ள பெரும் நகரங்களிலும் பெங்களுர், திருவனந்தபுரம், மும்பை போன்ற வெளிமாநிலங்களிலும் உள்ள பெரிய நகை கடை அதிபா;கள் எங்களிடம் தங்கத்தை தந்து ஆர்டர் கொடுத்து தங்க நகை ஆபரணங்கள் செய்து வந்தோம். 

கலைநயத்துடன் கூடிய கல்பதித்த ஆபரண நகைகள், தங்க மாலைகள், தங்க மோதிரங்கள் போன்ற தங்க நகை ஆபரணங்களை ஆர்டர் எடுத்து செய்து கொடுத்து வந்தோம். சாத்தான்குளம் நகரில் எங்கள் கை வண்ணத்தில் செய்யப்பட்ட தங்க ஆபரணங்களுக்கு வெளிமாவட்டங்களிலும், வெளிமாநிலங்களிலும் நகை கடைகாரர்கள் வாங்கி சென்று வந்தனர். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக தங்க விலை ஏற்றத்தின் உயா;வாலும் மேலும் தங்க நகைகள் செய்ய இயந்திரங்கள் புகுத்தப்பட்டதாலும் எங்கள் தொழில் அடியோடு நசுங்கி போய் விட்டது. 

தொழில் இன்றி எங்கள் குடும்பங்கள் வறுமையில் வாடி தவித்து வருகின்றனர். தொழில் நசுங்கி போனதால் எங்களை போன்று கலைநயத்துடன் செய்யும் தங்கநனை பொற்கொல்லர்கள் ஹோட்டல்களிலும், கட்டிடங்களுக்கு பெயின்ட் அடித்தும், கட்டிடம் கட்டும் வேளைக்கும் சென்று தொழில் நடத்தி பிழைத்து வங்தோம். ஆனால் கரோனா நோயால் அரசு ஊரடங்கு உத்திரவு பிரபித்ததால் இந்த தொழிலும் செய்ய முடியாமல் போய்விட்டது. 

தொழில் இன்றி என்ன செய்வது என தவித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு அமைப்பு சாரா கட்டுமான உடல் உழைப்பு தொழில் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து எங்களை போன்ற உறுப்பினர்களுக்கு (பொற்கொல்லர்) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கரோனா நிவாரண நிதியாக இரண்டு கட்டமாக ரூ.2000 வழங்க உத்திரவிட்டிருந்தார். ஆனால் தொழிலாளர் நலதுறை சார்பில் சாத்தான்குளத்தில் ஒருசிலர்களுக்கு மட்டுமே நிவாரண நிதி கிடைத்தது. எங்களை போன்ற பலதரப்பட்ட பொற்கொல்லர்களுக்கு கொரானா நிவாரண நிதி கிடைக்கவில்லை எனவே நிவாரண நிதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். மேலும் இது குறித்து சாத்தான்குளம் வட்டார ஸ்ரீவிஸ்வகர்மா பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் மூக்காண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

கோரிக்கையில் கூறியிறுப்பதாவது:  சாத்தான்குளம் நகரில் பாரம்பரியமிக்க தங்யநகை செய்து வரும் பொற்கொல்லர்கள் வேலையின்றி அவதிபட்டுள்ளனர். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யபட்டு உறுப்பினராக உள்ள இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கொரானா நிவாரண நிதி முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. எனவே அரசு முழுமையாக நிதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் மேலும் அடியோடு தங்கதொழில் நசுங்கி போனதால் தொழில் இழங்துள்ள பொற்கால்லர்களின் பட்டபடிப்பு முடித்த பிள்ளைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் .எனவே இந்த இரண்டு பட்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20ம் தேதியன்று சாத்தான்குளம் நகரில் என்னுடைய தலைமையில் பொற்கொல்லர்கள் கலந்து கொள்ளும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திட  முடிவெடுத்துள்ளோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory