» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் புதுமாப்பிள்ளை தற்கொலை

புதன் 3, ஜூன் 2020 7:10:43 AM (IST)

எட்டயபுரம் அருகே திருமணமான 10 மாதங்களில் மனைவி பிரிந்து சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழ நம்பிபுரத்தைச் சேர்ந்தவர் குருநாதன். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக உதவியாளர். இவருடைய மகன் சக்தி சிவா (33). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சக்தி சிவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி தன்னுடைய கணவரிடம் கோபித்து கொண்டு, தூத்துக்குடியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த சக்தி சிவா நேற்று காலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த சக்தி சிவாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 10 மாதங்களில் மனைவி பிரிந்து சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

சக்தி சிவம்Jun 4, 2020 - 11:09:48 AM | Posted IP 157.5*****

குடி குடியை கெடுக்கும்

SAKTHI SIVAJun 3, 2020 - 05:23:47 PM | Posted IP 162.1*****

AYYO PAVAM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory