» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் 53 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க திட்டம்

செவ்வாய் 2, ஜூன் 2020 9:09:32 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட அவசர கால கடன் திட்டத்தில் 53 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் வணிகர்களுக்கும் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடந்த 98 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது.கோவிட் 19 தொற்றுநோய் நாடு முழுவதும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்திய அரசு கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார பாதிப்பை மீட்டெடுக்க சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தில் ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கிகள் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்தரவாதமளிக்கப்பட்ட அவசர கால கடன் திட்டத்தின் மூலம் கூடுதல் பாதுகாப்பு இல்லாமல் ரூ.3 லட்சம் கோடி கூடுதல் கடன் அளிக்கும் திட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கேவி ராமமூர்த்தி கூறும்போது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஆகிய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 29.2.2020 தேதியின்படி அவர்களின் கணக்குகளில் இருப்பு நிலுவையில் உள்ள தொகையில் 20 சதவீதம் கூடுதல் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்களான 53 ஆயிரம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள் பயன் அடைவார்கள். இந்த கடனுக்காக உத்தரவாத கட்டணம், பிராசசிங் கட்டணம், மற்றும் வேறு கட்டணங்கள் கிடையாது. இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்க அனைத்து கிளைகளுக்கும்  உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளைகளை அணுகலாம் என அவர் தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes


Thoothukudi Business Directory