» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தட்டச்சு பயிலகங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

திங்கள் 1, ஜூன் 2020 6:22:03 PM (IST)


ஜூன் மாதம் முதல் தட்டச்சு பயிலகங்கள் செயல்பட அனுமதி தர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தட்டச்சு பயிலக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடி தட்டச்சு பயிலக உரிமையாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது. தூத்துக்குடியில் 100 தட்டச்சு பயிலகங்கள் இயங்குகிறோம். மேலும் 150 பேர் வரை பணி புரிகிறோம். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயில எங்களிடம் வருவார்கள். ஆனால் இந்த வருடம் கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மூன்று மாதம் பயிலகம் இயங்கவில்லை. இதனால் எங்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.

எங்களில் பெரும்பாலானோர் வாடகை கட்டடத்தில் தான் இயங்கி வருகிறோம். தற்போது வருமானமே இல்லாத சூழ்நிலையில் மூன்று மாத வாடகை மற்றும் பணியாளர் சம்பளம்  கொடுத்தும் குடும்பத்திற்கான அன்றாட தேவைகளுக்கு மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்களுக்கு நிவாரண நிதி வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தட்டச்சு பயிலகங்களில் சமூக இடைவெளி பின்பற்றி இயங்கும். பயிலகத்தில் காலை 6  மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் பயிற்சி செய்வார்கள். எனவே ஜூன் மாதம் முதல் தட்டச்சு பயிலகங்கள் செயல்பட அனுமதி அளிக்க ஆவண செய்யுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Murugan PanagudiJun 1, 2020 - 07:58:17 PM | Posted IP 108.1*****

வெற்றி பெற வாழ்த்துகிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications


Thoothukudi Business Directory