» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் பீகார் புறப்பட்டது

திங்கள் 1, ஜூன் 2020 5:20:46 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து 913 தொழிலாளர்களுடன் பீகார் மாநிலத்திற்கு  சிறப்பு ரயில் இன்று மாலைபுறப்பட்டுச் சென்றது. 

தூத்துக்குடியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில் இன்று புறப்பட்டது. இதில் தூத்துக்குடியில் இருந்து 521பேர், நெல்லையில் இருந்து 206பேர், கன்னியாகுமரியில் இருந்து  186பேர் என மொத்தம் 913பேர் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மாலை 4.55 மணிக்கு புறப்பட்ட இந்த சிறப்பு ரயிலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory