» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிநாட்டு பயணிகளை அழைத்து வர ஏற்பாடுகள்: வஉசி துறைமுகத்தில் அதிகாரிகள் ஆலோசனை!

திங்கள் 1, ஜூன் 2020 5:02:24 PM (IST)தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் மார்க்கமாக வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களை கப்பலின் மூலம் தாயகம் திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுகபொறுப்புக் கழகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கொரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் தவித்து வரும் இந்திய குடிமக்களை தாயகத்திற்கு அழைத்து வரும் முயற்சியாக இந்திய அரசு ‘சமுத்திர சேது’ என்ற திட்டத்தின்கீழ் கப்பகளின் வாயிலாக தாயகம் அழைத்து வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக சர்வதேச எல்லைகள் முடப்பட்டமையால் அனைத்து வழி போக்குவரத்தும் முடங்கியுள்ள இச்சூழலில் முதற்கட்டமாக இலங்கையில் தவித்து வரும் இந்திய குடிமக்களை 02.06.2020 அன்று தூத்துக்குடியிலுள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அழைத்து வர இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், சுஙகத்துறை, துறைமுக சுகாதார அமைப்பு, குடியுரிமைதுறை, இந்திய கடற்படை ஆகிய துறைகள் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்துடன் இணைந்து தூத்துக்குடி வரும் இந்தியர்களை இறக்குவதற்குகான அனைத்து நடவடிக்கைகளையும் தடையில்லாமல் மேற்கொள்ள, 01.06.2020, 30.05.2020 மற்றும் 29.05.2020 ஆகிய நாட்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், சந்தீப் நந்தூரி,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் துணைதலைவர், பிமல்குமார் ஜா, மாவட்ட ஆட்சியர் (கூடுதல் பொறுப்பு) விஷ்ணு சந்திரன், ஆகியோர் பயணிகள் இறங்க கூடிய கப்பல்தளம் மற்றும் பயணிகள் முனையத்தில் பார்வையிட்டு ஏற்பாடுகளை குறித்து மதிபாய்வு செய்தனர். 

இந்த கப்பலில் வரும் அனைத்து பயணிகளும் துறைமுக சுகாதார அமைப்பின் மூலம் முழு பரிசோதனைகுட்படுத்தப்பட்டு பின்பே கப்பலைவிட்டு இறக்கப்படுவார்கள். பரிசோதனை முடிவடைந்த பிறகு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் மூலம் அனைத்து பயணிகளுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, பயணிகளின் சமான்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பின்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்தின் மூலம் பயணிகள் முனையத்திற்கு அழைத்து செல்லப்படுவர்.

பயணிகள் முனையத்திற்கு பயணிகள் வந்தவுடன் பயணிகள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்ட பின்பு பயணிகள் கைபேசியில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவியிறக்கம் செய்து செயல்படுத்த வலியுறுத்தப்படுவார்கள். அதன் பிறகு பயணிகள் சுங்கதுறை மற்றும் குடியுரிமை துறையின் அனைத்து விதிமுறைகளின்படி சரிபார்க்கப்பட்டு பின்பு பயணிகள் பேருந்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சுங்கதுறை மற்றும் குடியுரிமைதுறையினர் தங்களது பணிகளை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கப்பல்தளம் 14 மற்றும் பயணிகள் முனையத்திலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் செய்துள்ளது. மேலும் பயணிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவினை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வாயிலாக வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களை கப்பலின் மூலம் தாயகம் திரும்புவதற்குகான பிரத்தியோக நிலையான இயக்கமுறையினை வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், இந்திய கடற்படை, சுங்கதுறை, குடியேற்றத்துறை மற்றும் துறைமுக சுகாதார அமைப்பு ஆகிய நிர்வாகங்களுடன் கலந்து ஆலோசித்து வடிமைத்து செயல்படுத்த உள்ளது. இவ்வாறு வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

kannanJun 1, 2020 - 05:49:46 PM | Posted IP 108.1*****

already thoothukudi chennai range ku poitu iruku.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory