» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காமராஜ் கல்லூரி சார்பில் கரோனா நிவாரண உதவிகள்

திங்கள் 1, ஜூன் 2020 1:15:23 PM (IST)தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி சார்பில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

உலகை அச்சுறுத்தும் கொரனா தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கினால் பாதிப்புகளுக்குள்ளான தூத்துக்குடியின் 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.54 மற்றும் 56ன் சார்பாக ரூ.1000 மதிப்புள்ள அரிசி, காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.  

காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், தாளமுத்துநகர் காவல் ஆங்வாளர் பிரேமா ஸ்டாலின் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.  கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டளருமான தேவராஜ், கல்லூரி அலுவலர் நாராயணன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உடனிருந்தனர்.  

நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் கொரனா தொற்று – ஊரடங்கு துவங்கிய நாளிலிருந்து காமராஜ் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அணியினர் பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சிப்பகுதிகளுக்குட்பட்ட சந்தை, நியாயவிலைக்கடைகளில் மக்களை சமுதாய தூரம் கடைப்பிடிக்க வைத்தல், தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகர மற்றும் மாவட்ட மக்கள் நல்வாழ்வுப் பணியாளர்களுக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு உதவுதல் போன்ற பணிகளில் பங்கேற்று வருகின்றனர்.  

மேலும், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களால் தயார் செய்யப்பட்ட 1000 முகக்கவசங்கள் ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.  அதனடிப்படையில் இன்னும் பல்வேறு பணிகளை காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory