» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருந்து விமானங்கள் இயங்குமா ? : பயணிகள் குழப்பம்

சனி 23, மே 2020 1:42:48 PM (IST)

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வரும் 25 ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படுமா என பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திலிருந்து 5 விமானங்கள் சென்னைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மார்ச் 25 ம் தேதி முதல் நாடு முழுவதம் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் பயணிகள் விமானம் இயங்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதால் விமானங்கள் இயக்க வேண்டாம் எனவும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

விமானங்கள் இயங்கலாம் என்ற அறிவிப்பு வெளியான உடன் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்ல சுமார் 50 பயணிகள் முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழக முதல்வர் தமிழகத்தில் விமானங்கள் இயங்க அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதால் மத்திய அரசு அறிவித்தபடி வரும் 25 ஆம் தேதி முதல் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயங்குமா என பயணிகள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து அரசு அல்லது விமானநிலையம் சார்பில் தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes

Thoothukudi Business Directory