» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிய பசிபிக் பிராந்திய மாநாடு : காணாெலி காட்சி மூலம் எம்பவர் சங்கர் பங்கேற்பு

சனி 23, மே 2020 12:53:35 PM (IST)எம்பவர் செயல் இயக்குநர் சங்கர் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பிராந்திய மாநாட்டில் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

ஐக்கிய நாட்டு சபையின் அழைப்பின் பேரில் தாய்லாந்து நாட்டிலுள்ள பாங்காங் நகரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பிராந்திய மாநாட்டில் தூத்துக்குடி எம்பவர் சமூக சேவை அமைப்பின் செயல் இயக்குநர் சங்கர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் ஆசிய பசிபிக் பிராந்திய பகுதிகளிலுள்ள பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஆசிய பசிபிக் பிராந்திய அமைப்பின் தலைமை நிர்வாகி அர்மிடா சல்சியா துவக்கி வைத்தார்.

இதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட எம்பவர் அமைப்பின் செயல் இயக்குநர் சங்கர் ஆசிய பசிபிக் பிராந்திய பகுதிகளில் உள்ள முதியவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எதிர் கொள்ளும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள், ஊரடங்கினால் முதியோர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை குறித்து விரிவாக தனது கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.   

இந்த பிரச்சனைகளின் தன்மையின் அடிப்படையில் ஐக்கிய நாட்டு சபையோடு இணைந்து தீர்வுகளை காண முயற்சிப்பதென மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஐக்கிய நாட்டு சபையின் துணை செயலாளர் ஆமினா முகம்மது, தாய்லாந்து நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரமுத்வினைய்,  இலங்கை நாட்டின் தூதுவர் சமந்தா ஜெயசூர்யா, பில்ப்பைன்ஸ் நாட்டின் துணை செயலாளர் ரோஸ்மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்பவர் நிறுவனத்தின் செயல் இயக்குநரான சங்கர் இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவராகவும், சர்வதேச அளவில் நுரையிரல் நோய் பவுண்டேஷனின் தலைவராகவும், தேசிய அளவில் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற பொறுப்புத் தலைவராகவும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற  உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 

மேலும் சமூக சேவை தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, கென்யா, சிங்கப்பூர் மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் இவர் பங்கேற்றுள்ளார்.


மக்கள் கருத்து

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.மே 24, 2020 - 08:02:29 PM | Posted IP 173.2*****

We are proud of you sir ,for representing in the conference on behalf of our nation. Congratulations.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory