» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவருடன் கருத்து வேறுபாடு : இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சனி 23, மே 2020 10:43:19 AM (IST)

எப்போதும் வென்றான் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகேயுள்ள கீழசெய்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி வள்ளியம்மாள் ஞானகிருபா (26). இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதியர் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனவேதனையடைந்த வள்ளியம்மாள் ஞானகிருபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Anbu Communications



Thoothukudi Business Directory